Monday, October 18, 2010

காதல்

காமம் அணிந்துகொண்ட முகமூடி காதல்.
ஆசை அறுபது நாள்.
மோகம் முப்பது நாள்.

Thursday, September 2, 2010

ஆக்கிரமித்தல்

ஆக்கிரமித்தல் என்றால் அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்ளுதல்.விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கு நிலத்தை ஆக்கிரமித்துக்கொல்லாமல் உரிய ஈட்டுத்தொகை கொடுத்து நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளலாம்.இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

Saturday, August 7, 2010

இல்லத்தரசி

இல்லத்தரசி என்பவர்களை அரசு, சம்பளம் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் அவர்கள் பணி அதாவது சேவை, பணம் கொடுத்து சரி
செய்யமுடியாதது.எனவே அவர்கள் ஆற்றுகின்ற சேவையை அரசு உணரவேண்டும்.கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் மேற்க்கண்டவாறு
கூறி உள்ளது.பெண்கள் எவ்வளவு சேவை செய்தாலும் ஒரு சிறு முன்னேற்றத்துக்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிஉள்ளது.


Wednesday, June 30, 2010

டாக்டர்.ஷாலினி

ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் அந்த தவறை பெற்றோர்கள் செய்கிறார்கள் என்று அர்த்தம். அதேபோல் வரன் தேடும்போது பெற்றோர்களை,
பரம்பரையை கவனிக்க வேண்டும்.நூலைப்போல சேலை.தாயைப்போல பிள்ளை.திருமணம் செய்துகொண்டபிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து போகவேண்டும்.இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை.விவாகரத்து
என்பது நமது கலாசாரத்துக்கு ஒத்துவராது. இதை நாம் சாதாரணமாக கூறுகிறோம். டாக்டர். ஷாலினி மருத்துவரீதியாக கூறுகிறார். நன்றி ஷாலினி.
.

Sunday, May 23, 2010

தாய்

தாய்மை, உலகின் உயரிய பதவி. அதற்க்கு இணை வேறு எந்த பதவியும் உலகில்
இல்லை.தாயை உலகில் முதல் தெய்வமாக வணங்குகிறார்கள்.ஆனால் பெண்
குழந்தை பிறந்துவிட்டால் யோசிக்கிறார்கள்.தெய்வத்துக்கே சோதனையா...?

Monday, April 26, 2010

வரதட்சணை

வரதட்சணை ஒழிக்கப்பட வேண்டும்.அதற்க்கு அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.வரதட்சணை வாங்குவோருக்கு அரசு தண்டனை வழங்க வேண்டும்.வரதட்சணை ஒழிக்கப்பட்டால்தான் பெண்களுக்கு முழு விடுதலை.

Friday, January 22, 2010

சாலை


சாலையின் இரு பக்கங்களிலும் கடைகளின் ஆக்கிரமிப்புகள். ஆடு மாடு
இவைகளின் நடமாட்டங்கள்.வேகமாக செல்லும் நான்கு,இரு சக்கர வாகனங்கள்.
இடையே மனிதர்களின் நடமாட்டம்.வருடத்திற்கு ஒருமுறை முன்னறிவிப்புடன்
அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றும்.அடுத்த நாளே ஆக்கிரமிப்புகளை
வைத்துக்கொள்வார்கள்.அதுவும்அரசுக்கு தெரியும்.

வேலைக்காரி

பெண்கள், தங்கள் குழந்தைகளை குடும்பத்தை காப்பதற்காக அடுத்த வீடுகளில்
வேலைக்கு போகிறார்கள்.அதை வைத்து பத்திரிக்கைகளில் ஆபாச ஜோக்
எழுதுகிறார்கள்.அதை எழுதுபவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனசாட்சி
இல்லாதவர்களா...?

Friday, January 8, 2010

kushboo

kushboo is a cine actress from other state. When she come to tamilnadu she unable to understand tamil and the people. She is a lone person and faced a lot of problem. She does not afraid for that and come forward again and again. But nobody had helped her. In southern tamil nadu people worshiped her as GODDESS. she is having more will power as late chief minister. Ms.jayalalitha.

பெண்

பெண்கள் வலிமையானவர்கள்.கிராமங்களில் காலையில் எழுந்து சமையல் செயது குழந்தைகளை பள்ளிக்கு அன்னுபியவுடன் வயலுக்கு சென்று
கடுமையாக வேலை பார்கிறார்கள். இரவு வீடு திரும்பி மீண்டும் சமயல் வேலை
பார்க்கிறார்கள். குடும்பத்தையும் குழந்தைகளையும் பொறுப்பாக கவனிக்கிறார்கள்.நகரத்திலும் அவ்வாறுதான். வீட்டு வேலைகளையும் செயது
அலுவலக வேலைகளையும் கவனிக்கிறார்கள்.அரசாங்க அலுவல்களில்
ஆண்களுக்கு சரியாக அணைத்து பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.

ladies are always having more power and strength.In village area they get up from the bed in the early morning and prepare food.They take care of their children and send them to school. After that they have to go to land to continue their work.They return to home in the evening and again prepare food.They take more responsible about children and family.
In town also ladies have to work hard.They are doing all cooking and washing clothes.They are attending their office work.
They are in most responsible job as like as gents.