Thursday, April 5, 2012

கற்பு

கற்பு என்பது பெண்களுக்காக மட்டுமே உள்ளது .
ஆண்களை இது கட்டுப்படுத்துவது இல்லை .
கணவன் இறந்தததும் மனைவி இறந்துவிடுவது முதல் நிலை கற்பு என்றும் ,
உடன்கட்டை ஏறுவது இரண்டாவது நிலை கற்பு என்றும் .
விதவைக்கோலம் பூண்டு வாழ்வது மூன்றாம் நிலை கற்பு என்றும்
புறநானூறு கூறுகின்றது .

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது .ஆனால் பெண்களுக்கு மட்டுமே
கற்பு என்பது ஆணாதிக்க செயல்பாடுதானே .............?

Monday, August 1, 2011

இலக்கணம்

சங்க இலக்கியங்களில் அச்சம்,நாணம்,மடம்,பயிர்ப்பு ஆகியவை பெண்களின்
அணிகலன்கள் என்றும், வீரமும் காதலும் ஆண்களின் அணிகலன்கள் என்றும்
கூறப்பட்டுள்ளது.இது சரியானதுதானா......?
கண்ணுக்கு மையும்,காலுக்கு கொலுசும் கொடுத்து அடிமைப்படுத்தி உள்ளனர்.

Friday, April 1, 2011

வீரம்

மேதாபட்கரை படியுங்கள். வாழ்க்கையில் போராடுங்கள்.
ஜான்சி ராணியை நினைவுகூருங்கள். பிரச்சனையை எதிர்கொள்ளுங்கள்.

Thursday, January 6, 2011

தீவிரவாதம்

தீவிரவாதம் ஒரு காட்டுமிராண்டித்தனம். தீவிரவாதத்தால் எதையும் சாதித்துவிட
முடியாது. ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லாதவர்கள் தீவிரவாதிகள்.

Monday, October 18, 2010

காதல்

காமம் அணிந்துகொண்ட முகமூடி காதல்.
ஆசை அறுபது நாள்.
மோகம் முப்பது நாள்.

Thursday, September 2, 2010

ஆக்கிரமித்தல்

ஆக்கிரமித்தல் என்றால் அனுமதி இல்லாமல் எடுத்துக்கொள்ளுதல்.விமான நிலைய விரிவாக்கம், மேம்பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கு நிலத்தை ஆக்கிரமித்துக்கொல்லாமல் உரிய ஈட்டுத்தொகை கொடுத்து நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளலாம்.இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

Saturday, August 7, 2010

இல்லத்தரசி

இல்லத்தரசி என்பவர்களை அரசு, சம்பளம் இல்லாதவர்கள் பட்டியலில் வைத்துள்ளது. ஆனால் அவர்கள் பணி அதாவது சேவை, பணம் கொடுத்து சரி
செய்யமுடியாதது.எனவே அவர்கள் ஆற்றுகின்ற சேவையை அரசு உணரவேண்டும்.கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் மேற்க்கண்டவாறு
கூறி உள்ளது.பெண்கள் எவ்வளவு சேவை செய்தாலும் ஒரு சிறு முன்னேற்றத்துக்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிஉள்ளது.